Connect with us

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா! இத்தனை மில்லியன் டாலரா?

america ukraine

News

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா! இத்தனை மில்லியன் டாலரா?

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா! இத்தனை மில்லியன் டாலரா?

நேற்றைய முன்தினம் ரஷ்யா தனது படைகளை உக்ரைன் மீது போர் புரிய உத்தரவிட்டிருந்தது. இதன் விளைவாக உக்ரைன் தலைநகரை ரஷ்ய ராணுவத்தினர் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு மட்டுமில்லாமல் உக்ரைனின் விமானத் தளங்கள் மற்றும் துறைமுகங்களை வரிசையாக ரஷ்ய ராணுவத்தினர் கைப்பற்றிக் கொண்டு வருகின்றனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் வன்மையாக கண்டித்து இருந்தது.

இருப்பினும் உக்ரைனுக்கு உதவி செய்ய எந்த ஒரு நாடும் படைகளை அனுப்பவில்லை என்பதும் உக்ரைனின் நிலைமைக்கு கேள்விக்குறியாக உள்ளது. அதுவும் குறிப்பாக உக்ரைனுக்கு ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா தற்போது வரை உக்ரைனுக்கு உதவ தனது ராணுவ படைகளை அனுப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர் நிதி தருவதாக கூறியுள்ளார். அதன்படி பாதுகாப்புக்காக உக்ரைனுக்கு சுமார் 600 மில்லியன் டாலர் நிதி அளிக்க அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். உடனடியாக நிதி உதவி வழங்குவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top