Connect with us

உக்ரைனுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா!! எத்தனை கோடி தெரியுமா?

america russia

Tamil Nadu

உக்ரைனுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா!! எத்தனை கோடி தெரியுமா?

உக்ரைனுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா!! எத்தனை கோடி தெரியுமா?

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில்அந்நாட்டிற்கு மேலும் ரூ.5,750 கோடி ராணுவ தளவாட உதவி அமெரிக்கா வழங்கியுள்ளது.

நேட்டோ நாடுகளில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 24- ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

ஆனால் உக்ரைன் ராணுவம் பொதுமக்கள் பங்களிப்புடன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் எளிதில் வீழ்ந்துவிடும் என்ற   ரஷ்யாவின் கணிப்பு பொய்துள்ளது. இதனால் முப்படைகளின் தாக்குதலை பன்மடங்கு அதிகரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சமீபத்தில் ரஷ்யா ரசாயன தாக்குதல் நடத்தலாம் என ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு ஜெலன்ஸ்கியுடன் அமேரிக்க அதிபர் ஜோபைடர் தொலைபேசியில் பேசி இருந்தார்.

அப்போது ரூ.5,750 கோடி கூடுதல் ராணுவ தளவாட உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார். இதனிடையே மரியுபோல் நகரை கைப்பற்ற தற்போது ரஷ்யா தீவிரம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top