சிம்புவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐக்கிய அரபு அரசு! என்ன கிப்ட் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் சிம்பு ,இவர் நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்திரனின் மகன் ஆவார். சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்து நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.ஆனால் சமீபத்தில் அவரது அப்பா இயக்குனர் மற்றும் நடிகருமான டி ராஜேந்திரன் அவர்களில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் படத்தில் அப்டேட்களை வெளியிடமுடியாத நிலை இருந்தது.

Simbu wedding with London based girl Heres the truth

கடந்த சில நாட்களின் முன் டி.ராஜேந்தர் அவர்கள் மேல் சிகிச்சைகாக அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். அவருக்கு மேல் சிகிச்சை நல்லபடியாக முடிந்து நலமாகிய நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியது.

தற்பொழுது முழு சிகிச்சை முடிந்ததால் நடிகர் சிம்பு தன்னுடைய தந்தை அழைத்துக்கொண்டு அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி உள்ளார்.

அப்பொழுது அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் வழியில் துபாயில் அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் காத்துக் கொண்டிருந்தது. ஐக்கிய அரபு எமிரேட் அரசு நடிகர் சிம்பு கோல்டன் விசா கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்து உள்ளது.

அவர் கோல்டன் விசா வாங்கிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசனுக்கு தான் இந்த விசா கொடுக்கப்பட்டது இந்நிலையில் அடுத்த இடத்தை பிடித்த சிம்புவை பல்வேறு ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

simbu veesa 1 1536x864 1

இந்தியா வந்த உடன் பத்து தலை திரைப்படத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் முடிவாக உள்ளாராம் அது மட்டும் இல்லாமல் அடுத்ததாக வென்று தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ள போவதாக தெரியவந்துள்ளது.

‘ராஜமாதா’வாக மாறிய வரலட்சுமி சரத்குமார்!

இந்நிலையில் சிம்புவிற்கு கோல்டன் விசா கிடைத்தது அவரது ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment