தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒன்றிய அரசு 20,000 கோடி ரூபாய் நிலுவை!!! உடனே வழங்க; நலத்திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம்!
பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கும். அவை ஓரளவிற்கு தான் பயன்படுத்தப்படும். இதனால் மத்திய அரசின் சார்பில் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகளால் தான் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். இதனால் ஒவ்வொரு மாநில அரசும் மத்திய அரசிடம் நலத்திட்ட உதவிகளுக்காக நிதியினை கோரி கடிதம் எழுதும்.
அந்தவகையில் தமிழகத்திற்கு சுமார் 20,000 கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டுக்கு ரூபாய் 20,000 கோடி நிலுவைத் தொகை வைத்துள்ளது குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது திமுக உறுப்பினர் வில்சன் நிலுவைத் தொகை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய மொத்த நிலுவைத் தொகையில் ஜிஎஸ்டி பாதி மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடியாக உள்ளது என்றும் கூறினார் .
அரிசி மானியம் நிலுவை தொகை மட்டும் ரூபாய் 2203 கோடியாக உள்ளது என்றும் திமுக எம்பி கூறினார். இந்தியாவில் உள்ள கிராமங்களில் செயல்பட்டு வரும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிலுவை தொகையும் ரூபாய் 1330 கோடியாக உள்ளது என்றும் அதனை வழங்க வேண்டும் என்றும் திமுக எம்பி வில்சன் கூறினார்.
நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு ஒருவேளை விடுக்காவிட்டால் மாநில அரசின் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது என்றும் வில்சன் கூறினார்.
