Connect with us

“மறைமுகமாக இந்தியைத் திணிக்கிறது ஒன்றிய அரசு”-பாமக நிறுவனர்!!

News

“மறைமுகமாக இந்தியைத் திணிக்கிறது ஒன்றிய அரசு”-பாமக நிறுவனர்!!

9cbc92592407fc79a5953f1bca35cbe3

கடந்த சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில் தேர்தலை சந்தித்தன. அதில் குறிப்பாக மிகவும் வலிமையான கூட்டணியாக காணப்பட்டது அதிமுக கூட்டணி. ஏனென்றால் அதிமுக கூட்டணியில் தேசிய கட்சியான பாஜக இருந்தது. அதோடு மட்டுமில்லாமல் பாமக கட்சியும் இருந்தது. மேலும் இவ்விரு கட்சிகளும் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓரளவிற்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.0fd6df0b5b5262d1803aeaf205a4f617

இந்த நிலையில் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவ்வபோது தமது கருத்தை பதிவு செய்வார். அதன் வரிசையில் தொடர்ச்சியாக தற்போது இந்தி திணிப்பு குறித்து கூறியுள்ளார். அதன்படி மறைமுகமாக இந்தி திணிக்கிறது ஒன்றிய அரசு என்று அவர் கூறியுள்ளார். ஹிந்தி யுடன் தாய்மொழியை இணைத்து பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்ற அமித்ஷா பேச்சுக்கு தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார்.

இந்தி மொழியை பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் எனக் கூறுவதில் ஏராளமான பொருள்கள் உள்ளன என்றும் பாமக நிறுவனர் கூறியுள்ளார். அமித்ஷாவின் பேச்சு மறைமுக இந்தி திணிப்பை உருவாக்கும் செயலாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top