
தமிழகம்
இரண்டு மாதமாக ஒரே விலை! அசத்தும் பெட்ரோல், டீசல்!!
ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் பிரச்சனையாக காணப்பட்டிருந்தது பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான். அதிலும் குறிப்பாக நம் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவியது.
இதனால் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு முன்பு வரை தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை ரூ. 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வாகன ஓட்டிகள் இடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக பெட்ரோல் விலை 110 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால் பல இடங்களில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றது. எனவே தமிழக அரசு உடனடியாக பெட்ரோல் மீதான விலையை ஏழு ரூபாய் வரை குறைந்தது.
இதன் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது கிட்டத்தட்ட 60 நாட்களாக எந்த ஒரு மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னையில் 60-வது நாளாக விலை மாற்றம் என்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 102.63 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேலையில் ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 94.24 கடந்த இரண்டு மாதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
