பிரபல நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் 44-வது திரைப்படத்தை மித்ரன் ஜவஹர் என்பவர் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் பாரதிராஜா இணைந்து உள்ளதாக சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. அதே போல் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் இணைந்து உள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ் படத்தில் முதன்முதலாக பாரதிராஜா இணைகிறார் என்பதும் திருவிளையாடல் ஆரம்பம் என்ற திரைப்படத்திற்கு பிறகு பிரகாஷ்ராஜ் மீண்டும் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது.
தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கி வரும் மாறன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
#Bharathiraja joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial pic.twitter.com/uCTWeXofLj
— Sun Pictures (@sunpictures) August 4, 2021
.@prakashraaj joins the cast of #D44.
@dhanushkraja @anirudhofficial pic.twitter.com/DYOcTn0uuj— Sun Pictures (@sunpictures) August 4, 2021