பிக்பாஸ் வீட்டில் இன்று நடக்கும் திருப்பம்: கமல்ஹாசன் அறிவிப்பு

cbb0ec2ca4e74fbef8739b2aa3f850ce-1

எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்ற தலைப்புடன் கடந்த 104 நாட்களாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி நடைபெற்றது என்பதும் இன்று மற்றும் நாளை இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே

இன்று இறுதிப் போட்டியின் முதல் பாகம் ஒளிபரப்பாகும் என்றும் நாளை டைட்டில் வின்னர் யார் என்பது ஒளிபரப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆரி, பாலாஜி, ரம்யா, ரியோ மற்றும் சோம் ஆகியோர் டைட்டில் வின்னருக்காக காத்திருக்கையில் அந்த டைட்டில் வின்னர் யார் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது

70e05ac6a13886bd9fc7e930bbb0b9a8

இந்த நிலையில் இன்று ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்படப் போவதாக கமல் சற்று முன் வெளியான வீடியோவில் தெரிவித்துள்ளார். இதுவரை இந்த வீட்டில் நாம் பல திருப்பங்களை பார்த்துவிட்டோம். இன்றும் ஒரு திருப்பத்தை எதிர் பாருங்கள் என்று அவர் டுவிஸ்ட் வைத்திருப்பது பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

இன்றைய திருப்பம் என்னவாக இருக்கும்? ஒருவேளை யாராவது ஒருவர் எவிக்ட் ஆகின்றாரா? அல்லது மீண்டும் பணப்பெட்டி வாய்ப்பு பிக்பாஸ் அளிக்கப் போகிறாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இருப்பினும் ஆரிதான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது என்பதால் இந்த சீசனில் சர்ப்ரைஸ் ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.