நானே கணவன்… நானே மனைவி.. நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுத்த டி.வி நடிகை!!

குஜராத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை கனிஷ்கா சோனி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்பவர் சோலோகேமி எனப்படும் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதற்கு பலரும் ஏராளமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த கனிஷ்கா சோனி என்பவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு தன்னை மட்டுமே நேசிப்பது பிரகாசமான முடிவு என கூறிய அவர் தாலி, குங்குமத்துடன் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இத்தகைய முடிவானது முழுமனதுடன் எடுக்கப்பட்டதாகவும், தற்போது அமெரிக்காவில் இருப்பதாக கூறியுள்ளார். அதோடு ஹாலிவுட்டில் பணியாற்றுவதற்காக முயற்சி செய்து வருவதாக நடிகை கனிஷ்கா சோனி தெரிவித்துள்ளார்.

இத்தகைய திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தியாவின் இரண்டாவது சோலோகேமி திருமணம் என்ற பெயரை கனிஷ்கா பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.