
Tamil Nadu
விசாரணைக் கைதி வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றவில்லை?: அதிமுக வெளிநடப்பு!!
சில நாட்களுக்கு முன்பு விசாரணை கைதி விக்னேஷ் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்தபோது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததாகவும் தலையில் ஒரு அங்குலம் அளவிற்கு காயம் ஏற்பட்டு இருந்ததாகவும் லத்தியால் தாக்கியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டது.
இதனால் அவரது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இது குறித்து சட்டப்பேரவையில் அதிமுகவினர் விவாதித்தனர். அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிகிறது.
விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றாததை கண்டித்து பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தனர். விக்னேஷ் மரணத்தில் முன்னுக்குப்பின் முரணாக தகவல் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக இன்று 9 போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சில மணி நேரங்களுக்கு முன்பே தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில்ன சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றுக் கொண்டுவருவது என்பது குறிப்பிடத்தக்கது.
