
Tamil Nadu
அதிர்ச்சி..! இனி ஆட்டோ கட்டணங்களின் விலை உயரும்..
தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை உச்சத்திற்கு உயர்ந்துள்ளது. இதன் தாக்கமாக சென்னையில் ஆட்டோக்களுக்கு விரைவில் புதிய கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ரயில்கள் போன்ற பல போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் ஆட்டோவில் பயணம் என்பது மக்களின் பிரிக்கமுடியாத அங்கமாக உள்ளது.
இதனிடையே எரிபொருள் விலை ஏற்றம் மட்டுமில்லாமல் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அதிக அளவில் விதிக்கப்படும் அபராதமும் இதற்கு காரணமாக இருப்பதாக போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.
இந்நிலையில் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வந்தவர்கள் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் காரணமாக ஆட்டோக்களை நாடும் நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழலில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவது பொதுமக்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது. மேலும், ஆட்டோ ஓட்டுனர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ஆட்டோ கட்டணங்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.
