அருவியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை; சோகத்தில் மூழ்கிய சொந்தங்கள்!

ஓசூர் அருகே அருவியில் குளிக்க சென்ற கல்லுாரி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்தவர் அயாத் பாஷா. இவருடைய மகன் ஷாகின்ஷா வயது 20. ஓசூரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அப்பகுதியை சேர்ந்த இனாயத் என்பவரது மகன் ஷமீர் உள்ளிட்ட 5 நண்பர்கள், அஞ்செட்டி வனப்பகுதியில் திருமுருக்கு வளைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்று உள்ளனர்.

அங்கிருந்த நீரோடையில் குளித்து கொண்டிருந்த போது நீச்சல் தெரியாததால் ஷாகின்ஷா நீரில் மூழ்கினார். அவரை அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் நீரில் முழ்கிய ஷாகின் ஷா மூச்சுதிணறி உயிரிழந்தார். இதுகுறித்து உடன் சென்ற நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், அஞ்செட்டி போலீசார் மற்றும் தேன்கனிக்கோட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

நீண்ட நேர தேடலுக்குப் பிறகு ஷாகின் ஷாவின் உடலைக் கைப்பற்றிய தீயணைப்புத்துறையின் அதனை போலீசார் மூலமாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment