அதிர்ச்சி! முடி உதிர்வால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

கேரளாவில் முடி உதிர்வால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அத்தோலி பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் ( வயது 29). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக முடி உதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

டிடிவி உடன் கூட்டணிக்கு தயார்…பாஜக பிரிக்கவில்லை – ஓபிஎஸ்!

இதன் காரணமாக தோல் சிறப்பு மையத்தில் சிகிச்சை எடுத்தும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவருடைய புருவ முடிகள் கூட உதிரத் தொடங்கியுள்ளது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் பிரசாந் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பட்டா கத்தியுடன் அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள்; 2 பேர் கைது!

மேலும், உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவ நிர்வாகத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment