குடியால் நடந்த கொடூரம் – நடுரோட்டில் துடிதுடிக்க பறிபோன உயிர்!

ராஜபாளையத்தில் குடி போதையில் வாகனத்தை ஓட்டி வந்தவர் மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சோலை சேரியை சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளியான இவர் வழக்கம் போல வேலையை முடித்து விட்டு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.அந்த சமயம் தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு இரு சக்கர வாகனத்தில் குடி போதையில் சென்று கொண்டிருந்த கற்பகராஜா என்பவர் மாரியப்பன் மீது மோதி உள்ளார். இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பனுக்கு தலை உள்ளிட்ட பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சேத்தூர் ஊரக காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்தி சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய கற்பகராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.