பாம்பை மீட்க சென்ற நபருக்கு பாம்பால் நேர்ந்த சோகம்…. அதிர்ச்சியளிக்கும் வீடியோ பதிவு…!

பொதுவாக நம் வீடுகளில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் பாம்பு புகுந்து விட்டால் வனத்துறைக்கோ அல்லது தீயணைப்பு துறைக்கோ தகவல் அளித்து அவற்றை பிடித்து செல்ல கூறுவோம். அப்படி இல்லையெனில் பாம்பு பிடிப்பதில் சிறந்து விளங்கும் ஏதேனும் ஒரு நபரை தொடர்பு கொண்டு உதவி கேட்போம்.

பாம்புகள் மிக ஆபத்தான விஷச்சந்து என்பதால் அவற்றை மிகவும் கவனமாக கையாள வேண்டும். முன் அனுபவம் இல்லாத யாரும் பாம்புகளை பிடிக்க முயற்சி செய்யக்கூடாது. மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

அதன்படி ஹாவேரி மாவட்டம் ஷிகாவி தாலுகாவில் உள்ள லேட் கிராமத்தில் செங்கல் சூளை ஒன்றில் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு நுழைந்துள்ளது. பாம்பை கண்டதும் அங்கிருந்த ஊழியர்கள் பதறியடித்து ஓடியுள்ளனர். என்ன செய்வதென தெரியாமல் திகைத்த நிலையில், ராஜூ கவுரி என்பவர் பாம்பை பிடிக்க முன்வந்துள்ளார்.

அதன்படி செங்கல்களுக்கு இடையே பதுங்கியிருந்த நாகப்பாம்பை ராஜு கவுரி பிடிக்க முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு ராஜுவை தாக்கியது. இதனையடுத்து உள்ளூர்வாசிகள் உடனடியாக ராஜூவை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது ராஜூ உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாம்பை பிடிக்கும் முயற்சியில் இளைஞர் பாம்பால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தயவு செய்து யாரும் அனுபவம் இல்லாமல் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடாதீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment