ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த சோகம்; மாடு முட்டியதில் உரிமையாளரே உயிரிழப்பு!

தமிழகத்தில் இந்த வாரம் தொடங்கியது முதல் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்றைய தினம் மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக மாடுகளை பிடித்த கார்த்திக் என்பவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. அதேவேளையில் பாலமுருகன் என்ற இளைஞர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். ஜல்லிக்கட்டு போட்டி நடந்தாலே எப்படியாவது ஒரு உயிர்பலி நிகழ்ந்துவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகிறது.

அந்த வரிசையில் தற்போது மாடு முட்டியதில் உரிமையாளரே உயிரிழந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நிகழ்ந்தது.

அதன்படி திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் உரிமையாளர் மீனாட்சி என்பவர் உயிரிழந்தார். ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெறும் போது, மாடு முட்டியதில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மீனாட்சி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment