சடலங்களை ஆற்றில் புதைக்கும் அவலம்: கண்டுகொள்ளுமா அரசு?
கீரமங்கலம் கிராமத்தில் சுடுகாடு இல்லாத காரணத்தினால் சடலங்களை ஆற்றில் புதைக்கும் அவலநிலை ஏற்ப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் கீரமங்கலம் கிராம மக்கள் சுடுகாடு இல்லாத காரணத்தினால் இறந்தப்பின் சடலத்தை வெள்ளாற்றில் புதைத்து வருகின்றனர்.
கடந்த கார்த்திகை மாதம் ஒருவர் இறந்தபோது இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று காட்சி சோசியல் மீடியாவில் வெளிவந்த நிலையில் இன்று ராயர் என்கிற விவசாயி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனால் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து அவரது உடலை வெள்ளாற்றில் புதைப்பதற்காக சுமந்து சென்றனர். இதனை கண்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் அதிகாரிகள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாக தெரிகிறது.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றால் சடலத்தை நடுரோட்டில் வைத்து போராட்டத்தை நடத்துவோம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
