தஞ்சையை தொடர்ந்து நாகையிலும் சப்பரத்தேரால் நடந்த விபரீதம்!!

நாகையில் சித்திரைத் தேர் திருவிழாவில் சப்பரத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த உத்திரப்பிரதேச கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சப்பரத் தேரோட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

70 அடி உயரம் கொண்ட சப்பத்தை ஊர்மக்கள் இழுத்துச் சென்றனர். அப்போது சப்பரத்தை நிறுத்த சக்கரங்களுக்கு இடையில் முட்டுக்கட்டை போட்டனர். அந்த பணியில் 30- வயதான இளைஞர் தீபன் ராஜன் என்பவர் ஈடுப்பட்டார்.

சப்பரத்தை அவர் நிறுத்த முயன்ற தருணத்தில் பக்தர்கள் வேகமாக இழுத்ததால் முட்டுக்கட்டை போட முயன்ற தீபன் ராஜன் மீதும் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவருக்கு முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி தீபன்ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சையில் நடந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க மின்சாரம் நிறுத்தப்பட்ட போதும் இருப்பினும் வேறு வழியில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment