தமிழ் சினிமாவில் நயன்தாரா 2005-ல் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்து 19 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக முன்னணியில் உள்ளார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா.
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தற்போழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடித்துவருகிறார்.
தற்போது இந்தியில் அட்லீ இயக்கம் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகி நடிக்க உள்ளார். மேலும் தன் கைவசம் இறைவன், கன்னெக்ட் ஆகிய 2 தமிழ் படங்களும், கோல்டு என்ற மலையாள படமும், காட்பாதர் என்ற தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார்.
கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி டைரக்டர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதுவரை 74 படங்களில் நடித்துள்ள நயன்தாரா, நயன்தாராவின் 75-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கான பூஜை சென்னையில் நடைப்பெற்றயுள்ளதாகவும் மேலும் இந்த படத்தில் ராஜா ராணியை தொடர்ந்து ஜெய் , சத்தியராஜ் மீண்டும் நயன்தாராவுடன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு பெயர் அன்னபூரணி என பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா ஒரு ஆச்சாரமான சைவ குடும்பத்தை சார்ந்தவராம், மேலும் அவர் படத்தில் ஷேப் ஆக நடித்துள்ளார்.
ஹன்சிகாவின் 50தாவது படமான மஹா படத்தின் டிரெய்லர் ! வைரல் வீடியோ
இந்நிலையில் சைவம் மட்டும் சாப்பிடும் நயன்தாரா ஒரு ஷேப் என்பதால் அசைவம் சமைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். தன் திறமையை இந்த உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்பதால் விடா முயற்சியில் போராடுவதையே படத்தின் கதைக்களம் . இந்த படத்திற்கு நயன்தாரா எந்த அளவு ஒத்துழைப்பு கொடுக்கிறாரோ அந்த அளவிற்கு படம் நல்ல படையாக வரும் எனவும் கூறப்படுகிறது.