Connect with us

அஜித்தின் 61வது படத்தின் டைட்டில் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்!

ajith main 2 1 1

பொழுதுபோக்கு

அஜித்தின் 61வது படத்தின் டைட்டில் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்!

நடிகர் அஜித் ஹெச் .வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையா உழைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை காட்சியாக்க சென்னை அண்ணா சாலை போன்ற செட் ஐதராபாத்தில் போடப்பட்டு வருவதாக கூறப்பட்டது . இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

ajith 978787878787878787878787878787878787878789789

அந்த ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள், அஜய் மற்றும் வீரா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்நிலையில் அஜித்தின் அடுத்த கெட்டப்பில் புனேவின் சூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் பிரபல பாலிவுட் நடிகரும், கே.ஜி.எஃப் 2-வில் வில்லனான சஞ்சய் தத் தான் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மாஸான தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது.

boney collage 1627727950 1641640740

லிகர் பட நிகழ்ச்சியில் புடவையில் வந்த ரம்யா கிருஷ்ணன்! கலக்கலான போட்டோ சூட்!

மேலும் அஜித் அண்மைக்காலமாக அவர் நடிப்பில் வரும் படங்களுக்கு ‘V’- என்ற எழுத்து முதன்மையாக கொண்டு டைட்டில் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சான்றாக வீரம் , விவேகம், வேதாளம் ,வலிமை ,விஸ்வாசம் போன்ற படங்கள் அவருக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் AK61 குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி AK61 படத்தின் டைட்டில் வல்லமை என சொல்லப்படுகிறது.இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் வரும் வரை காத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top