அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டது!!-சசிகலா பகீர்; அதிர்ச்சியில் அதிமுக!

நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை கூறியிருந்தது. அதன்படி 2017 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்த உத்தரவு அதிமுக இடையே பெரும் சலசலப்பை உண்டாக்கியது. அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வாறு சிறப்பு நீதிபதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதோடு மட்டுமில்லாமல் டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்ததையும் சுட்டிக்காட்டி நீதிபதி கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உள்ள நிலையில் தற்போது சசிகலா திடீரென்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருவது தெரிகிறது.

அதன்படி அவர் அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டதாக சசிகலா பேட்டி அளித்து க்கொண்டிருக்கிறார் அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் சசிகலா கூறியுள்ளார். இதனால் சசிகலா இவ்வாறு கூறியுள்ளது ஏதேனும் மாற்றம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment