Connect with us

உதயநிதிக்கான காலம் கனிந்து விட்டது!! உங்கள் உழைப்பு ஒரு தொகுதியோடு மட்டும் நிற்கக்கூடாது!!

Udayanithi

Tamil Nadu

உதயநிதிக்கான காலம் கனிந்து விட்டது!! உங்கள் உழைப்பு ஒரு தொகுதியோடு மட்டும் நிற்கக்கூடாது!!

சினிமா துறையில் இருந்து பலரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால் அனைவரும் படுதோல்வி அடைந்தார்கள். திமுகவின் இளைஞரணித் தலைவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.

அவர் பிரச்சாரத்தின் போது தமிழகம் எங்கும் சென்று பரப்புரை மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் ஆன பின்பும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் பல்வேறு திட்டங்களை அறிவிப்பதற்காகவும் மக்களை சந்திப்பதற்காக பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினின் குரல் ஓங்கியபடியே காணப்படுகிறது. இதனால் இவரின் அரசியல் வளர்ச்சி பற்றி பலரும் கருத்துக்களைக் கூறிக் கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் பெரம்பலூர் எம்எல்ஏ உதயநிதிக்கான காலம் கனிந்து விட்டது என்று கூறி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். உதயநிதியின் உழைப்பு ஒரு தொகுதியில் மட்டும் நின்று விடக்கூடாது என்றும் தமிழ்நாடு முழுவதும் பயன் பெற வேண்டும் என்று பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கூறியுள்ளார். உதயநிதிக்கான காலம் கனிந்துவிட்டது முதலமைச்சர் மனம் கனிய வேண்டும் என்றும் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top