இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் என் மனதில் எப்போதும் இருக்கும் – எம்எஸ் பாஸ்கர்!

தமிழ் சினிமாவில் மிக முக்கிய குணச்சித்திர நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் M S பாஸ்கர். 1987 ஆம் ஆண்டு ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலமாக சினிமாவில் அறிமுகமானர். இவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ‘அரசி’, ‘செல்வி’ போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரில் ‘பட்டாபி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் அவரை பட்டாபி என்றே அழைக்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் ஒன்றிணைந்து நடித்திருப்பார்.

பின்னர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் M S பாஸ்கர். 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மொழி’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதைப் பெற்றார்.
அடுத்ததாக 2017 ஆம் ஆண்டு வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.

தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் ‘பார்க்கிங்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று M S பாஸ்கர் அவர்களுக்கு அவரது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் ரோட்டரி டிஸ்ட்ரிக் கான்பெரென்ஸ் சார்பாக ஸ்டேஜ் க்ராப்ட்ஸ் கேம் சேஞ்சேர் விருதுகள் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் M S பாஸ்கர் அவர்களுக்கு ‘லெஜெண்ட்டரி பெர்ஃபாமர் ஆப் தமிழ் சினிமா’ என்ற விருது வழங்கி கௌரவித்தார்கள். விருதை பெற்றுக் கொண்ட M S பாஸ்கர் அவர்கள் மேடையில் பேசுகையில், ஒவ்வொரு நாளும் நான் ஷூட்டிங் செல்லும் போது புதிதாக செல்வது போன்று தான் நினைத்துக் கொண்டு செல்வேன். ஒவ்வொரு படம் நான் நடித்து முடித்த பின்பு படத்தில் என் நடிப்பை பார்க்கும் பொழுது இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் என்று நினைப்பேனே தவிர எனக்கு திருப்தி வந்ததே இல்லை. அதே போல் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் என் மனதில் எப்போதும் இருக்கும். அதற்காக என் மூச்சு உள்ள வரை ஓடி கொண்டிருப்பேன் என்று பகிர்ந்துள்ளார் M S பாஸ்கர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...