மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல்: உள்ளாட்சியை பிடிக்கும் முயற்சியா? முக்கிய புள்ளிகளை கலந்திருக்கும் திமுக!

தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம், திருச்சி போன்ற மாநகராட்சிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. அதோடு நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் திமுக அறிவித்துள்ளது. திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளின் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது

இந்த வேட்பாளர்களில் சில முக்கிய முன்னாள் நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி,

அன்பழகன்:

திருச்சியில் முன்னாள் துணை மேயராக இருந்த அன்பழகன் உள்பட 16 வேட்பாளர்கள் நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க உள்ளது.திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கே.என் சேகரன்:

அதற்கடுத்தபடியாக முன்னாள் எம்எல்ஏ கே.என் சேகரன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளார். திருச்சி மாநகராட்சியில் 40 வது வார்டில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.என். சேகரன் போட்டியிடுகிறார். திருவெறும்பூர் தொகுதியில் 2001, 2006 ஆம் ஆண்டு எம்எல்ஏவாக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஞ்சுகம் பூபதி:

தஞ்சை மாநகராட்சியில் திமுக சார்பில் அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீதாஜீவன் சகோதரன்:

அமைச்சர் கீதாஜீவன் சகோதரன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment