விஷால் நடிப்பில் வெளியான லத்தி படத்தின் டீசர் இதோ!

இயக்குனர் வினோத் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் லத்தி, ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர். போலீஸ் கதைக்களத்தில் மையமாக படம் அமைந்துள்ளது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழியில் உருவாகிறது, இந்த படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 15ம் தேதிக்கு வெளியீட்டை தள்ளிவைத்துள்ளனர்.

 

781958 lathi 14 1

அதற்கு காரணம் விஷால் தான் கிளைமாக்ஸ் சண்டைகாட்சிகள் படமாக்கியபோது எதிர்பாராத விதமாக விஷால் காலில் நிஜமாகவே அடி விழுந்து விட தற்போது விஷாலுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி டீசர் தற்போழுது வெளியாகியுள்ளது.குறிப்பாக ‘அயோக்யா’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க நேர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

images 2022 07 24T214545.977

இந்த படத்தில் 8 வயது குழந்தைக்கு அப்பாவாக விஷால் நடித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் கிசுகிசுக்கப்படுகிறது .வெளியாகி சுமார் 1.38 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே உள்ளது.வெகு விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment