அதிர்ச்சி! மாணவனை கொன்ற ஆசிரியர்.. கர்நாடகாவில் பயங்கரம்!!

கர்நாடகாவில் 10-வயது சிறுவனை ஆசிரியர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நரகுந்த தாலுகா ஹாட்லி கிராமத்தில் அரசு உதவி பெற்றும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் முத்தப்பா மற்றும் கீதா ஆகியோர் தற்காலிக ஆசியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அடிக்கடி சண்டை போடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

அந்த வகையில் நேற்றைய தினத்தில் ள்ளி முதல் மாடியில் வழக்கம் போல இருவரும் சண்டை போட்டுள்ளனர். அப்போது கீதாவை முத்தப்பா மண்வெட்டியால் தாக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த கீதாவின் மகன் பரத் ஆசிரியர் முத்தப்பாவை தடுக்க முயன்றுள்ளார்.

இதனான் ஆத்திரமடைந்த முத்தப்பா மாணவனை முதல் மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் மாணவன் படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். அதே சமயம் கொலை செய்த ஆசிரியர் முத்தப்பா தலைமறைவானதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.