Connect with us

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்!: தேர்வு வாரியம்

TRB

செய்திகள்

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்!: தேர்வு வாரியம்

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்!: தேர்வு வாரியம்

இன்றைய தினம் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் அடுத்தடுத்த முக்கியமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகிறது. அந்த வரிசையில் இன்றைய தினம் ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்தான தகவல் ஒன்று வெளியானது.

அதன்படி வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு பிப்ரவரி இரண்டு மற்றும் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2407 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

4989 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து மே மாதம் அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்.சி.இ.ஆர்.டி விரைவுவளர்கள் பணிக்கான தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அரசு கலைக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் முதல் வாரம் நடத்தப்படும் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 1334 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு வாரியம் கூறியது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தேர்வு வாரியம் கூறியது. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top