டாஸ்மாக் டெண்டர்: கடந்தாண்டை விட இரு மடங்கு அதிகம்! அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்;

தமிழகத்தின் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் டெண்டர் பற்றிய முக்கிய அறிவிப்புகளை கூறி வருகிறார். அதன்படி 2019 ஆம் ஆண்டில் 6482 டெண்டர்கள் மட்டுமே பெறப்பட்டன என்று கூறினார். டாஸ்மார்க் டெண்டர்களில் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

இந்த ஆண்டு வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதால் இதுவரை 11715 டெண்டர்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர்கள் கோரப்பட்டு உள்ளன என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

டெண்டர்கள் எடுப்பவர்கள் ஆன்லைனிலும் நேரிலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கடந்த ஆட்சியில் முறைகேடாக சில பார்கள் ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்றும் கூறினார்.

அனைத்து விண்ணப்பங்களையும் முழுமையாக ஆய்வு செய்துதான் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார். கடந்த ஆட்சியின் போது இருந்த அதே விதிகளை பின்பற்றி தான் இந்த ஆட்சியும் டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் கோரப்பட்டு உள்ளன என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment