ஒரு மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் எங்கும் வெள்ளக் காடாக இருக்கிறது. ஏனென்றால் தினந்தோறும் நம் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் என அனைத்து நீர்ப்பாசனங்களும் நிரம்பி வழிந்தன.
தமிழகத்தில் ஓடும் ஒவ்வொரு ஆறு கரைபுரண்டு ஓடியது. தென் தமிழகத்தின் மிக முக்கிய நதிகளில் ஒன்றான வற்றாத நதி தாமிரபரணியில் வெள்ளம் போல ஆற்று நீர் ஓடுகிறது.
இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்களாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளதோடு மட்டுமில்லாமல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஏரிகளும் குளங்களும் நிரம்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.