தமிழ் மாணவர் உடல் சீனாவில் நல்லடக்கம்; காணொளி மூலம் பெற்றோர் உறவினர் கண்ணீர் அஞ்சலி!!

தற்போது இந்தியாவில் உள்ள பல மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று தங்களது பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக உக்ரைன் நாட்டில் ஏராளமானோர் நம் இந்திய மாணவர்களே மருத்துவ படிப்பு தொடர்ந்து படித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உள்ள நிலையில் சீனாவிலும் நம் தமிழ் மாணவர்கள் மேற்படிப்பை மேற்கொள்கின்றனர். அவர்களின் ஒருவர் தான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் அப்துல்லா.

தற்போது சீனாவில் நிலைமை தலைகீழாக உள்ளது, ஏனென்றால் சீனாவில் கொரோனா பரவலின் தாக்கம் அதிவேகமாக காணப்படுகிறது. இதனால் அங்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது,

இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சீனாவிலேயே உடல் நல குறைவின் காரணமாக உயிரிழந்தார். உயிரிழந்த மாணவரின் உடல் சீனாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

உடல் நலக்குறைவால் இறந்த புதுக்கோட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் அப்துல்லா உடல் சீனாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேக் அப்துல்லா உடல் சீனாவிலேயே இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

16 நாட்களுக்கு பின் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் காணொளி மூலம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.