மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்: சசிகலா

பொதுவாக எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சியை விமர்சிக்கும் உரிமையை பெற்றுக் கொண்டிருக்கும். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியை அதிரும் அளவிற்கு எதிர்க்கட்சிகள் வரிசையாக கேள்வி கேட்கும் உரிமையை பெற்று உள்ளன.

சசிகலா

ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சிக்குள்ளேயே மிகப்பெரிய குழப்பம் நிகழ்ந்து கொண்டுள்ளது.  தமிழகத்தில்  எதிர்க்கட்சியாக உள்ளது அதிமுக. இந்த அதிமுக கட்சியில் சசிகலா வருகையை அடுத்து பெரும் குழப்பம் நிலவுகிறது.

வெள்ளம்

இந்த நிலையில் சசிகலா தற்போது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.ஏனென்றால் நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வீடுகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்.

மக்களுக்கு தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு உடனே அளிக்க வேண்டும் என்றும்  சசிகலா வலியுறுத்தியுள்ளார். பெரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் சசிகலா.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment