கட்டாய மதமாற்றம்: இன்னும் 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!!

நம் தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மத மாற்றம் என்பது கட்டாயமாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதமாற்றத்தை தடை செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு ஏற்பு என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.

ஜெகநாதன் மனுவை விசாரணைக்கேற்ற நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம் அளித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரும் வழக்கு விசாரணைக்கு உகந்தது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கட்டாய மதமாற்ற புகார்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று உறுதி அளித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment