ஆப்கானில் அராஜகம் பண்ணும் தாலிபான்கள்! 19 பேர் உயிரிழப்பு; 50 பேர் படுகாயம்!

உலக நாடுகளுக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள். சில மாதங்களுக்கு முன்பு தான் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.தாலிபன்கள்

அதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு ஓடும் நிலைக்கு காணப்பட்டுள்ளனர். பல நேரங்களில் தலிபான்களின்  கொடூரமான சட்டங்கள் அனைத்தும் அங்குள்ள மக்களை பாதிப்படைகிறது. குறிப்பாக பெண் குழந்தைகள், பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிராக தாலிபான்களின் சட்டம் காணப்படுகிறது.

அங்கு தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு, துப்பாக்கி சுடுதல் போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே உள்ளன. அதன் தொடர்ச்சியாக ஆப்கானில் பயங்கர தாக்குதலில் 19 பேர் தற்போது உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் காபூலில் நிகழ்ந்த இந்த பயங்கர தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனை மற்றும் அதன் அருகே என இரண்டு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் அருகே துப்பாக்கிச் சூடும் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆப்கானிய மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment