அப்பாடா குறைஞ்சிடுச்சி; தேனி விவசாயிகள் செம்ம ஹேப்பி!

தேனியில் நேற்றிரவு பெய்த திடீர் கனமழையால் கோடை வெப்பம் தணிந்தது மக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக நேற்று காலை கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரவு லேசான சாரல் மலையாக பெய்யத் துவங்கி பின்னர் இடி மின்னலுடன் கூடிய கனமழையாக பெய்து வருகிறது. இந்த மழையானது தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவதானப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், வடுகபட்டி, கைலாசபட்டி, லட்சுமிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான முருகமலை, கும்பக்கரை, சோத்துப்பாறை, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எனவே கடந்த சில நாட்களாக வெயின் தாக்கம் அதிகரித்து வாட்டி வதைத்து வந்த நிலையில், கோடை வெப்பத்தை தணிக்க பெய்த இந்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.