Connect with us

திடீரென்று சரிந்த தேயிலை விலை-அமைச்சர் அவசர ஆலோசனை!!

tea industry scaled

தமிழகம்

திடீரென்று சரிந்த தேயிலை விலை-அமைச்சர் அவசர ஆலோசனை!!

நம் தமிழகத்தில் தற்போது அனைத்து விதமான உணவு பொருட்களின் விலையும் சற்று அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

இது மட்டும் இன்றி நெசவு தொழிலுக்கான மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்து காணப்படுவதால் பல நேரங்களில் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மேலும் திருப்பூர் ஜவுளித்துறை சங்கத்தின் சார்பிலும் அவ்வப்போது வேலை நிறுத்த போராட்டமும் நடைபெறும். இந்த நிலையில் திடீரென்று நாம் பருகும் தேநீர் தேநீரின் தேயிலை விலை சரிந்துள்ளதாக காணப்படுகிறது.

இது தொடர்பாக அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி உதகை பகுதியில் தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினார்.

பசுந்தேயிலைகளுக்கு கடும் விளைவீழ்ச்சி ஏற்பட்டதை எடுத்து அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினார். விலை வீழ்ச்சியை தடுக்க ஒரு கிலோ தேயிலை தூள் விலை 65 சதவீதம் விவசாயிகளுக்கும், 35 சதவீதம் ஆலைகளுக்கும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேயிலை விவசாயிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top