Connect with us

கலவரம் நடந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளியில் படிக்க நடவடிக்கை!!

sakthi school

தமிழகம்

கலவரம் நடந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளியில் படிக்க நடவடிக்கை!!

நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெரும் கலவரம் நிகழ்ந்தது. அதிலும் கலவரக்காரர்கள் அங்குள்ள பள்ளி மேசைகளை அடித்து நொறுக்கினார்.

மேலும் பள்ளி வாகனங்களை தீயிட்டு எரித்தனர். இதனால் சம்பவ இடத்தில் டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று ஆய்வு செய்தார் மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பெற்றோர் உணர்வை புரிந்து கொண்டு தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அரசியல் செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top