ஸ்ரீமதி விவகாரம்… மாணவியின் தாய் ஆவேச பேட்டி!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஒருவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மாணவியில் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக மாணவியின் தாய் ஸ்ரீமதி தொடர்ந்து அரசியல் தலைவர்களை சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறார்.

அதே சமயம் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் 16-வது இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் போராட்டம் இன்று கடலூரில் நடைப்பெற்றது.

அதில் கலந்துகொண்ட ஸ்ரீமதியின் தாய் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவது சரியல்ல என்று கூறியுள்ளார்.

மேலும், தனக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்கவேண்டும் என சிபிசிஐடி போலீசார் தெரிவிப்பது இத்தகைய செயலானது தன்னை கொச்சைப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.