வேலூரில் சோகம்! மைதானத்தை சுற்றி வந்த மாணவன் பலி..!!

வேலூர் அடுத்த அணைக்கட்டு பகுதியில் அரசு ஆண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ரவிசந்திரன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் 9-ம் வகுப்பின் ஆசிரியர் வகுப்பிற்கு வராததால் மாணவர்கள் கூச்சலிட்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது வந்த தலைமை ஆசிரியர் மைதானத்தை 5 முறை சுற்றிவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உஷார்! அடுத்த 3 மணிநேரம் கவனம்.. 18 மாவட்டங்களில் கனமழை!!

அப்போது மோகன்ராஜ் என்ற மாணவன் என்னால் ஓடமுடியவில்லை என தெரிவித்துள்ளார். இருப்பினும், தலைமை ஆசிரியர் மீண்டும் மாணவனை கட்டாயப்படுத்தி ஓட சொன்னதாக தெரிகிறது.

இதன் காரணமாக மீண்டும் மாணவன் ஓடியதால் மயக்கமடைந்து சுயநினைவு இழந்துள்ளார். இதனால் பதறிப்போன சக மாணவர்கள் மாணவனை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

நளினி உள்பட 6 பேர் விடுதலை: தமிழக முதல்வர் வரவேற்பு!!

அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment