ட்விட்டரில் லீவு கேட்டு குசும்பு செய்த மாணவர்; விடுமுறை அளித்த கலெக்டர்!

நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெருவாரியான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டன.

மேகநாத ரெட்டி

இந்த நிலையில் டுவிட்டர் வாயிலாக மாணவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் டேக்  செய்து விடுமுறை கேட்டுள்ளார். அதன்படி நேற்றையதினம் திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதனை டுவிட்டர் பகுதியில் பார்த்த மாணவர் ஒருவர் விருதுநகர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது சார் என்று கையெடுத்து கும்பிட்டு வேண்டினார். அதோடு அவரின் கமெண்ட்ஸில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியை டேக் செய்து பதிவு செய்திருந்தார்.

இதனை கண்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உங்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி. இப்பொழுது நமது மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது தம்பி என்று கூறினார்.

அதனால் நாளைய தினம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று கூறினார். இந்த விடுமுறையை நீங்கள் வீட்டுப்பாடங்கள் முடிப்பதற்கு பயன்படுத்துங்கள் என்றும் அதனை ஆசிரியர்கள் கண்காணிப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.

இவரது செயல் பலருக்கும் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக காணப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இது போன்று செய்வது முதல் முறை அல்ல என்றும் இதற்கு முன்பு பொதுமக்களின் பலரின் கருத்துக்களுக்கு நேரடியாகவே அவர் பதிலளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment