Connect with us

ஓடும் ரயிலில் மாணவியின் செயல்! பதைக்கவைக்கும் காட்சிகள்!

Capture 34

தமிழகம்

ஓடும் ரயிலில் மாணவியின் செயல்! பதைக்கவைக்கும் காட்சிகள்!

நாம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்துகளின் படியில் தொங்குவது, ரயிலில் படிகளில் தொங்குவது போன்ற செயல்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஓடும் ரயிலில் மாணவி ஒருவர் காலை கீழே தேய்த்துக் கொண்டே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மின்சார ரயிலில் பள்ளி மாணவி ஒருவர் மின்சார ரயிலில் ஏறி படிக்கட்டின் அருகில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ரயில் வேகமாக செல்லத் துவங்கிய போது, நடைமேடை முடியும் வரை காலை தரையில் தேய்த்தவாறு அசட்டு தைரியத்துடன் பயணித்ததாக கூறப்படுகிறது. இத்தகைய செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நடைமேடை முடியும் வரை காலை தரையில் தேய்த்தவாறு கல்லூரி மாணவர்கள் சேட்டை அதிகமாக இருக்கும் சூழலில் அவர்களுக்கே சவால் விடும் வகையில் பள்ளி மாணவிகளும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு இருப்பது அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மேலும், இத்தகைய செயலானது அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top