தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பள்ளி வகனத்தில் இருந்து விழுந்த மாணவி படுகாயம் அடைந்தார்.
கோவில்பட்டியில் இயங்கி வரும் தனியார் பிரபல பள்ளியில் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவரின் மகள் ரத்திமா என்பவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல், பள்ளி பேருந்தில் பள்ளிக்கு சென்ற ரத்திமா திடீரென எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
இந்நிலையில் மாணவி விழுந்ததை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதனால் பதறிப்போய் உடனடியாக வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சென்ற மாணவி, பள்ளி வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.