மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வேலைநிறுத்த போராட்டம்-காரணம் என்ன?

வேலைநிறுத்தம் போராட்டம் நாடெங்கும் இந்தியாவெங்கும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதிலும் அரசு தொழிற்சங்கங்கள் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக தமிழகமெங்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். அதுவும் குறிப்பாக தலைநகர் சென்னையில் வடபழனி, தியாகராயநகர், பாரிமுனை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் 90% பேருந்துகள் இயக்கப்படவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் விடுமுறைக்காக வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் சென்னை வந்தவர்கள் பல மணி நேரமாக பேருந்து நிலையங்களில் நிற்கும் நிலை காணப்படுகிறது.

இதனால் மெட்ரோ, ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில்  பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் மாணவர்களின் கல்விக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதன்படி பேருந்து ஓடாததால் திருப்புதல் தேர்வுக்கு தயாராக இருந்த மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இரண்டாம் திருப்புதல் தேர்வு இன்று துவங்கும் நிலையில் பஸ்கள் ஓடாததால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment