நாடே பரபரப்பு… “என் கன்னித்தன்மையை வயதான பெண்மணியிடம் இழந்தேன்”… அதிர்வலையை ஏற்படுத்திய பிரபலம்!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் சுயசரிதையில் அவரது கன்னித்தன்மை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது இங்கிலாந்து முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அரசு பதவியை துறந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் அரண்மனையை விட்டு வெளியேறிய இங்கிலாந்து இளவரசர் ஹாரி தன்னுடைய வாழ்வை சுய சரிதையாக எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் தன் போர் பயிற்சிகளை, 20 ஆண்டுகளாக போர் நடந்துக் கொண்டிருந்த ஆஃப்கானில் மேற்கொண்டதாக குறிப்பிட்டுக்கிறார். மேலும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பயிற்சிக்காக 25 தாலிபன்களை கொன்றதாக ஹாரி தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரது சுய சரிதை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியிட்டிற்கு முன்பாகவே ஸ்பானிஷ் பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் இங்கிலாந்தின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. ஏற்கனவே அரசு குடும்பத்துடன் ஹாரிக்கு நல்ல உறவு இல்லாத நிலையில், 2019ம் ஆண்டு தன்னை வில்லியம்ஸ் தாக்கியது குறித்தும், தனது மனைவி மேகனை விமர்சித்தது குறித்தும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பதின்ம வயதில் போதைக்காக கொகைன் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ள ஹாரி, தனது கன்னித் தன்மையை ஒரு பப்பில் வயதான பெண்மணியிடம் இழந்ததாகவும் இது ஒரு அவமானகரமான அத்தியாயம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.