ஒரு டாக்டர் நடிகரான கதை…. ராக்கி பட நடிகர் குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்….!

பொதுவாக திரையுலகில் புதிதாக களமிறங்கும் நடிகர் அல்லது நடிகைகள் அதற்கு முன்பு வேறு ஏதேனும் துறையில் பணியாற்றி இருப்பார்கள். அந்த வகையில் தற்போது தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவி நிஜ வாழ்க்கையில் ஒரு டாக்டர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

வசந்த் ரவி

தற்போது அவரை போலவே நிஜ வாழ்க்கையில் டாக்டராக இருந்து தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் குறித்து தான் நாம் பார்க்க போகிறோம். அதன்படி தனது முதல் படத்திலேயே அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பலரது பாராட்டை தட்டி சென்றவர் தான் நடிகர் வசந்த் ரவி.

இவர் தேசிய விருது இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் வசந்த் ரவியின் நடிப்பு பாராட்டை பெற்றது. அதனை தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தாலும் அனைத்து வாய்ப்பையும் ஓகே சொல்லாமல் நிறுத்தி நிதானமாக படங்களை தேர்வு செய்தார்.

அந்த வரிசையில் சமீபத்தில் வசந்த் ரவி நடிப்பில் வெளியான படம் தான் ராக்கி. இப்படமும் அனைவராலும் பாராட்டப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினருக்க தொலைபேசி மூலம் பாராட்டை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வசந்த் ரவி குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

ராக்கி படத்தில் மிரட்டலான ரவுடியாக நடித்து பார்வையாளர்களை மிரளவைத்த வசந்த் ரவி அடிப்படையில் ஒரு மருத்துவராம். அமெரிக்காவில் எம்பிபிஎஸ் முடித்து விட்டு ஹெல்த் கேர் மேனேஜ்மென்டில் முதுகலை பட்டம் பெற்றுள்ளாராம். அதனை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையிலும் மருத்துவராக வேலை செய்துள்ளாராம்.

ஆனால் நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் மருத்துவராக இருக்கும் போதே நேரம் கிடைக்கும் போது நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டு நல்ல நடிகராக தன்னை மேம்படுத்தி உள்ளார். தற்போது ராக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து வசந்த் ரவி கைவசம் 4 படங்களை கைவசம் வைத்துள்ளாராம். இதில், காதல், திரில்லர் என கலவையான கதைகள் உள்ளதாம். விரைவில் அவரை புதிய தோற்றத்தில் பார்க்கலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment