Connect with us

பொது இடங்களில் சிலை வைக்க அனுமதிக்கவில்லை!: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு;

statue 1

செய்திகள்

பொது இடங்களில் சிலை வைக்க அனுமதிக்கவில்லை!: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு;

பொது இடங்களில் சிலை வைக்க அனுமதிக்கவில்லை!: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு;

நம் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சிலைகள் அதிகமாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக சாலைகளில் வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்கள் சிலைகளும், தேசத் தலைவர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு முரணாக தமிழ் நாட்டில் பொது இடங்களில் சிலை வைக்க எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, உள்ளாட்சி அமைப்பு அனுமதி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கருத்தில் கொண்டு அனுமதி தரப்படுகிறது என்றும் தலைமைச் செயலாளர் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு நிலம், நீர் நிலைகளை ஆக்கிரமிக்காமல் சிலை அமைக்கப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. கோவையில் அவினாசி சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top