Connect with us

அதிமுக அதிர்ச்சி! ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது!!

poes garden217 1611315518

News

அதிமுக அதிர்ச்சி! ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது!!

தமிழகத்தின் முந்தைய முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவரின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமை ஆனது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமை

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்று கூறியுள்ளது. அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

வேதா இல்லத்தை அரசுடமை ஆக்கப்பட்ட எந்த ஒரு சட்டமும் செல்லாது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது எதிர்த்து அவரது உறவினர்கள் தீபக், தீபா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.

தீபக், தீபா தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி இத்தகைய தீர்ப்பினை வழங்கினார். சுமார் 24,000 சதுர அடி பரப்புள்ள வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற அதிமுக ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. வேதா இல்லத்தை கையகப்படுத்த ரூபாய் 67 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top