Connect with us

வரியை நவம்பர் மாதமே குறைத்துவிட்டோம்? பெட்ரோல் விலை குறையாமல் இருப்பதற்கு காரணம் மாநில அரசுதான்..!

vqp0rm9g pmmodicmmeetingaugust1

செய்திகள்

வரியை நவம்பர் மாதமே குறைத்துவிட்டோம்? பெட்ரோல் விலை குறையாமல் இருப்பதற்கு காரணம் மாநில அரசுதான்..!

நம் தமிழகத்தில் கடந்த 21 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எந்த ஒரு மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் ரூபாய் 110 க்கு பெட்ரோல், டீசல் ரூபாய் 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர்களுடன் பேசினார். இதில் பெட்ரோல், டீசல் வரியை தமிழகம் உட்பட மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அதன்படி எரிபொருள் மீதான வரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு குறைத்து விட்டது என்று பிரதமர் மோடி கூறினார். பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை தமிழகம் கேரளம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வரையும் குறைக்காமல் உள்ளதாக கூறினார்.

வரியை குறைத்து அதன் மூலம் பலனை மக்களுக்கு மாநில அரசுகள் தான் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். தமிழகம் உட்பட சில மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை என கூறினார்.

மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்றும் கூறினார். வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் பொருளாதார முடிவுகளில் மத்திய, மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top