Connect with us

எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்! 7.5% இட ஒதுக்கீட்டில் வந்தவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது!!

mbbs first year class

செய்திகள்

எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்! 7.5% இட ஒதுக்கீட்டில் வந்தவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது!!

எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்! 7.5% இட ஒதுக்கீட்டில் வந்தவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது!!

பல ஏழை எளிய மாணவர்களின் பெரும் கனவாக காணப்படுவது எம்.பி.பி.எஸ் படிப்புதான். இந்த எம்பிபிஎஸ் படிப்புக்கு பெரும் தடையாக அமைந்துள்ளது நீட் தேர்வு. நீட் தேர்வு குறித்து தமிழக சட்டப்பேரவையில் நீட் மசோதா மீண்டும் தாக்கல் செய்யபட்டது.

குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பொதுப் பிரிவினருக்கு மட்டும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நம் தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கின.

முதல் கட்ட கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 5076 மாணவர்களுக்கு இன்றைய தினம் முதல் நாள் முதல் வகுப்பு தொடங்கியுள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் சேர்ந்த உள்ளவர்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top