இரவில் போராட்டத்தில் இறங்கிய இலங்கை மக்கள்; ஊரடங்கு உத்தரவு அமல்!
தற்போது நமது அண்டை நாடான இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது.
இதனால் அங்கு பல்வேறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் குறிப்பாக 13 மணி நேரத்திற்கு மின்வெட்டு இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்கள் பல பகுதிகளில் கிளர்ச்சியில் ஈடுபட தொடங்கி விட்டனர்
இந்த நிலையில் இலங்கையில் போலீஸ் ஊரடங்கு சட்டத்தினை அமல்படுத்தி உள்ளதாக தெரிகிறது. அதன்படி இலங்கை வடக்கு கொழும்பு, தெற்கு மற்றும் மத்திய கொழும்புவில் போலீசார் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்புவில் கோட்டபய ராஜபக்ஷ வீட்டை இரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தடுக்க இலங்கை அரசு தவறு இதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
