Connect with us

தமிழக மீனவர்களுக்கு நடக்கும் அநீதி! மீனவர்களின் படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு!!

boat

செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு நடக்கும் அநீதி! மீனவர்களின் படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு!!

தமிழக மீனவர்களுக்கு நடக்கும் அநீதி! மீனவர்களின் படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு!!

இந்தியாவில் உயிருக்கு உத்தரவாதமில்லாத தொழில் என்று கேட்டால் அனைவரும் கூறுவது மீன்பிடித் தொழில் தான். ஏனென்றால் கடல் அலையின் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விடும். இதையெல்லாம் தாண்டி மீன் பிடிக்கும் அவர்களை இலங்கை கடற்படையினர் தொந்தரவு செய்வார்.

ஏனென்றால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவர். ஒரு சிலர் உயிர் இழப்பார்கள் ஒரு சிலரை கடற்படையினர் கைதிகளாக பிடித்துச் சென்று விடும்.

இவையெல்லாம் தாண்டி தற்போது தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக காணப்படுகிறது. அதன்படி இலங்கை கடற்படை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.

இதில் நாட்டுப்படகு, விசைப்படகு உட்பட மொத்தம் நூற்றி ஐந்து படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டு ஏலத்தில் விற்கப்பட்ட உள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை மொத்தம் நூற்றி ஐந்து படகுகளை இலங்கையில் ஏலம் விட அந்நாட்டு அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top